6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு: இன்று தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2026

6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு: இன்று தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது

 

தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் 11, 12-ம் வகுப்பு தேர்​வு​கள் நிறைவு பெற்​று​விட்​டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இத்​தேர்வு வரும் 6-ம் தேதி​யுடன் முடிவடைகிறது.

அதே​போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான முழு ஆண்டு தேர்​வு​கள் வரும் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்​தப்​படும் என பள்​ளிக் கல்​வித் துறை வெளி​யிட்ட வரு​டாந்​திர நாட்​காட்​டி​யில் முன்​னர் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

வாக்​குச்​சாவடி மையங்​கள்: இதற்​கிடையே, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெறுகிறது. இதன் வாக்​குச்​சாவடி மையங்​களாக பள்​ளி​கள் செயல்பட இருக்​கின்​றன. இதையடுத்​து, 1 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான தேர்​வு​கள் முன்​கூட்​டியே ஏப்​ரல் 1 முதல் 16-ம் தேதி வரை நடத்​தப்​படும் என்று பள்​ளிக் கல்​வித் துறை அறி​வித்​தது. அதன்​படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்று (1-ம் தேதி) முதல் தொடங்​கு​கின்றன.

இதைத் தொடர்ந்​து, 4, 5-ம் வகுப்​பு​களுக்கு வரும் 6-ம் தேதி​யும், 1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு வரும் 8-ம் தேதி​யும் இறுதி பரு​வத் தேர்​வு​கள் தொடங்கி நடை​பெறவுள்​ளன. காலை, மதி​யம் என இரு​வேளை​களாக நடத்​தப்​படும் இத்​தேர்​வு​கள் ஒட்​டுமொத்​த​மாக, வரும் 16-ம் தேதி​யுடன் நிறைவு பெறுகின்​றன.

அதன் பின்​னர், 1 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான கோடை விடு​முறை வரும் 17-ம் தேதி முதல் தொடங்​கும். எனினும், ஆசிரியர்​கள் பள்ளி இறுதி வேலை​நாள் வரை பணிக்கு வரவேண்​டும். விடு​முறை முடிந்து மீண்​டும் பள்​ளி​களை ஜூன் 4-ம் தேதி திறப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி