பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்​தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு​கள் வெளி​யீடு தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் வெளி​யீடு சற்று தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. இதுகுறித்​து, தேர்​வுத் துறை அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “பிளஸ்-2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

எனினும், தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும்.

இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது. புதிய அரசு அமைந்​ததும், உரிய ஒப்​புதல் பெற்று தேர்வு முடிவு​களை வெளி​யிட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகின்றன’’ என்றனர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி