கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்க அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2026

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்க அறிவுறுத்தல்

 

தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்​ளி​களும் நாளை (ஜூன் 4) முதல் திறக்​கப்பட உள்​ளன. தமிழகத்​தில் இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடத்​தப்​பட்​டது.

இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை​யும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்​ரல் 1 முதல் 16-ம் தேதி வரை​யும் தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

தொடர்ந்து பள்ளி மாணவர்​களுக்கு ஏப்​ரல் 17-ம் தேதி முதல் கோடை விடு​முறை விடப்​பட்​டது. இந்த நாட்​களில் தமிழக அரசு சார்​பில் மாணவர்​கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​பட்​டன.

அதன்​படி கோடை விடு​முறை முடிந்து பள்​ளி​கள் நாளை (ஜூன் 4) முதல் திறக்​கப்பட உள்​ளன. இதற்​கான வளாகப் பராமரிப்பு உள்​ளிட்ட பல்​வேறு முன்​னேற்​பாடு​கள் பள்​ளி​கள் தரப்​பில் முடிக்​கப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளன.

முதல் நாளில் மாணவர்​களை வரவேற்​ப​தற்​கான ஏற்​பாடு​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இதுத​விர பள்​ளி​கள் திறக்​கும் முதல் நாளி​லேயே அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு விலை​யில்லா பாடநூல்​கள், நோட்​டுப் புத்​தகங்​கள் போன்​றவற்றை விநி​யோகம் செய்​வதற்​கான பணி​களும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

இதுத​விர புதிய இலவச பேருந்து பயண அட்​டைகள் வழங்​கப்​படும் வரை ஏற்​கெனவே உள்ள பழைய அட்​டையைக் கொண்டு மாணவர்​கள் பயணிக்​கலாம் என்று போக்​கு​வரத்​துத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதற்​கிடையே பள்ளி வேலை நாட்​கள், தேர்​வு​கள், விடு​முறை, ஆசிரியர் பயிற்​சி, அட்​ட​வணை உயர்​கல்வி வழி​காட்டி முகாம் உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​கள் அடங்​கிய கல்​வி​யாண்டு நாட்​காட்டி 2018-ம் ஆண்​டு​முதல் ஆண்​டு​தோறும் பள்​ளிக்​கல்​வித் துறை​யால் வெளி​யிடப்​பட்டு வரு​கிறது. அதன்​படி வரும் கல்​வி​யாண்​டுக்​கான (2026-27) நாட்​காட்​டி​யானது எப்​போது வெளி​யாகும் என்ற எதிர்​பார்ப்​பு​கள் எழுந்​துள்​ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி