பாலிடெக்னிக் மாணவர்கள் பழைய அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2026

பாலிடெக்னிக் மாணவர்கள் பழைய அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு

பாலிடெக்​னிக் டிப்​ளமா படித்த மாணவர்​கள், பழைய அரியர் பாடங்​களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்​கப்​படு​வ​தாக, உயர்​கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, உயர்​கல்​வித் துறை செயலர் அருண் ராய் வெளி​யிட்​டுள்ள அரசாணை: பாலிடெக்​னிக் பொறி​யியல் டிப்​ளமா படிப்பை முடித்து தேர்​வெழுத வழங்​கப்​பட்ட வாய்ப்​பு​களை​யும் முடித்​து, தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்​களை (அரியர்​ஸ்) வைத்​துள்ள மாணவர்​கள், தேர்​வில் கலந்​து ​கொள்ள 2015, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2025-ம் ஆண்​டு​களில் சிறப்பு வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் சிறப்பு வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டும், செமஸ்​டர் தேர்​வு​களில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்​துள்ள மாணவர்​கள், வரும் செமஸ்​டர் தேர்​வு​களில் தங்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கு​மாறு கோரிக்​கைகள் வைத்து வரு​வ​தாக​வும், அம்​மாணவர்​களின் நலன் கரு​தி, 2026 அக்​டோபர், 2027 ஏப்​ரல் செமஸ்​டர் தேர்​வு​களின் போது மட்​டும், நீண்ட கால​மாக அரியர் வைத்​துள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்​களுக்கு சிறப்பு வாய்ப்பு மூலம் தேர்​வெழுத​வும், உரிய தேர்வு கட்​ட​ணத்தை நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடு​மாறும் தொழில்​நுட்​பத் தேர்​வு​கள் வாரி​யத்​தின் தலை​வர் அரசை கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இதை ஏற்​று, பாலிடெக்​னிக் டிப்​ளமா படிப்பை முடித்து பாடங்​களில் தேர்ச்சி பெறாமல் உள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்​களுக்கு வரும் அக்​டோபர் மற்​றும் 2027 ஏப்​ரல் செமஸ்​டர் தேர்​வு​களின்​போது மட்​டும் தேர்​வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கி அரசு ஆணை​யிடு​கிறது. அம்​மாணவர்​களின் சிறப்பு வாய்ப்​புக்​காக பதிவு கட்​ட​ண​மாக ரூ.750-ம் ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ் கட்​ட​ண​மாக ரூ.40ம், விண்​ணப்ப கட்​ட​ண​மாக ரூ.20ம், ஒரு பாடத்​துக்கு தேர்வு கட்​ட​ண​மாக ரூ.65-ம் நிர்​ண​யித்து அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி