நிறைவேற்றுங்க : தேர்தல் அறிக்கையில் சொன்ன பழைய பென்ஷன் வாக்குறுதிகள் - முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் அரசு ஊழியர்கள்
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று, மாநில அளவில் முதல்வருக்கு தபால் அனுப்பி, பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தினர்.த.வெ.க., தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 'டி.ஏ.பி.எஸ்.,' பென்ஷன் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைக்கு ஏற்ப, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்' என தெரிவித்திருந்தது.இந்த தேர்தல் அறிக்கை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, தபால் ஓட்டுக்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு ஓட்டாக வெளிப்பட்டது. கூறிய வாக்குறுதிப்படி 'டி.ஏ.பி.எஸ்.,' ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், என முதல்வருக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பி உள்ளனர். வரும், 15 வரை இதே போன்று தபால் அனுப்பும் போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். ஈரோட்டில் ஒருங்கிணைப்பாளர் வெங்கிடு தலைமையில் தபால் அனுப்பினர். அதுபோல, பல்வேறு ஊர்களில் இருந்தும் தபால் அனுப்பப்பட்டது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி