Jun 5, 2026
Home
kalviseithi
குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிக்கக்கூடாது!! சுப்ரீம் கோர்ட்டு கருத்து.
குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிக்கக்கூடாது!! சுப்ரீம் கோர்ட்டு கருத்து.
குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிப்பது தகுதி யான விண்ணப்பதார ரின் வாய்ப்பை பறிப்ப தாக அமைந்து விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுரத்து
தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர்,
தற்காலிக வங்கி உதவியாளர் பணியை பெற்றிருந்தார். பின்னர் அவரை வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவரை மீண் டும் பணியில் அமர்த்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அசானுத்தின் அமானுல்லா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, வங்கியின் உத்தரவை உறுதி செய்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட நபர்,
தான் ஒரு பட்டதாரி என்ற உண்மையை மறைத்து, 10-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பெற்றுள்ளார். இதை சென்னை ஐகோர்ட்டு கவனிக்க மறந்து விட்டது.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அரசுப்பணி கிடைக்கச்செய்ய வேண்டும்.
குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான பணியை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிப்பது, உண்மையிலேயே தகுதியான விண்ணப்பதாரரின் வாய்ப்பை தட்டி பறிப்பதாக அமைந்து விடும்.
கல்வித்தகுதிக்கு உச்சவரம்பு
கல்வித்தகுதிக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது நியாய மானதுதான். வாழ்க்கை சூழ்நிலை காரணமாக, உயர்கல்வியை தொடர முடியாதவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் அதன் நோக்கம்.
அதிககல்வித்தகுதி கொண்டவர்களுடன் போட்டியிட முடியாதவர்களுக்காக சில பணிகளை அரசு ஒதுக்கி உள்ளது. இத்தகைய கொள்கையை கோர்ட்டுகள் உறுதி செய்துள்ளன.
இவ்வாறு நீதிபதிகள் கூறிரன்.
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

அப்படினா அதிகமா படிச்சவங்களுக்கு அதற்கு தகுதியானவேலை. கொடுக்க சொல்லி அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா இந்த கோர்ட்....வேலை வாய்ப்பு இல்லனு தானே தன் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கலனாலும் தன்னோடு குடும்ப இஷ்டத்துக்கு ஏதோ ஒரு சின்ன வேலைக்கு கூட போறோம்...அது வரும் பொறுக்கலயா உங்களுக்கு
ReplyDeleteFirst தெரிஞ்சிருந்தா 10 வதுக்கு மேல படிச்சிருக்கமாட்டேன்
ReplyDelete