உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (High School Headmaster) பதவி உயர்வு தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று 2012 ஆம் ஆண்டில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 01-01-2022 முதல் ஆண்டுவாரியான (Year-wise) பேனல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு *உயர்நீதிமன்றம் ஏற்கனவே* *இரண்டு முறை பரிசீலித்து,*
*அதனை ஆதரிக்கும் வகையில்* *தெளிவான மற்றும் சட்டரீதியாக* *உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்* *நீதிமன்றத்தின் பல்வேறு* *தீர்ப்புகளை முன் உதாரணங்களாக* *காட்டி சட்டரீதியாக வலிமையான* *உத்தரவுகளை வெவ்வேறு* *நீதிபதிகள் வழங்கியுள்ளார்கள்*
மேலும், மாண்புமிகு உச்ச மற்றும் உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில், TET தேர்வு நடைமுறையில் இல்லாத கடந்த காலங்களிலும் கூட,
Crucial date ல் ஆண்டுவாரியான பேனல்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் (Directorate of School Education) மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் (Directorate of Elementary Education) ஆகியவற்றின் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் *பலமுறை* *பதவி உயர்வு கலந்தாய்வுகள்* *நடத்தப்பட்டு* *நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன* என்பது இதுவரை அரசுத் தரப்பில் ஆண்டு வாரியாக பாதுகாக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக,எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், *ஏற்கனவே கல்வித்* *துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு* *தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு* *வந்த நிர்வாக நடைமுறைக்கு* *எதிராக அரசுத் தரப்பு* *மேல்முறையீடு (Appeal)* *மேற்கொள்வதற்கான அவசியமோ* *அல்லது சட்ட*
*அடிப்படையோ/முகாந்திரமோ* *எழவில்லை* என்பது கல்வித்துறையின், அனைத்து உயர் நிர்வாக மட்டங்கள் தரப்பிலும் மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 14 (Equality before Law), Article 16 (Equality of Opportunity in Public Employment) மற்றும் Legitimate Expectation, Administrative Consistency, Doctrine of Non-Arbitrariness ஆகிய சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில், *ஏற்கனவே* *பலமுறை செயல்படுத்தப்பட்ட* *நடைமுறையை,தகுதி* *உடையவர்களை நேரடியாக* *பாதிக்கச் செய்யும் வண்ணம்* *எவ்வித காரணமின்றி மாற்றுவது* *சட்ட ரீதியாக நிலைத்திருக்காது* *என்பது குறிப்பிடத்தக்கது.*
மேலும், மாண்புமிகு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அரசுத் தரப்பு இதுவரை,ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு தொடங்கிய நாள் முதல் இது நாள் வரை எந்தவித சட்ட ரீதியிலான இடைக்காலத் தடையாணையும் (Interim Stay Order) பெறவில்லை என்பதாலும், தீர்ப்பு தற்போது முழுமையான செயலாக்கத்திற்குரியதாக (Operative and Enforceable Order) உள்ளது என்பதாலும், அதனை சரியான முறையில் உரிய விதிகளின் படி (Accordance with law)
நடைமுறைப்படுத்துவது கல்வித்துறையின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பாகும்.
ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு சார்ந்த வழக்கில் பலமுறை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் அரசுத் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சந்திக்க விரும்பவில்லை.இது அரசுத் தரப்புக்கு கூடுதல் நிதி இழப்பையும்,நீதிமன்றத்தில் அவப்பெயரையும் ஏற்படுத்தும் செயலாகவும் அமையும்.
அதன்படி, கல்வித்துறையின் தொடர்புடைய உயர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி 01-01-2022 முதல் ஆண்டுவாரியான பேனலை TET 2012 ஆசிரியர்களுக்கு தயாரித்தல், தகுதியான ஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த மூப்புரிமையை (Seniority) பாதுகாத்தல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகளை மாணவர்கள் நலன் கருதியும்,தொடர்ந்து இருந்து வரும் அரசின் கடும் நிர்வாக அழுத்தங்களை குறைக்கும் பொருட்டும், எவ்வித கால தாமதமும் இன்றி தொடர்ந்து முன்னெடுத்தல் ஆகியவற்றில் சட்டப்பூர்வ கடமையின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயநிலையும், எவ்வித சுணக்கமும்/ தொய்வும் இன்றி அரசுத்தரப்பில் செயல்பட வேண்டி உள்ளது.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசுத் தரப்பினால் மேல்முறையீடு செய்யப்படும் என்ற பல ஆசிரியர் சங்கங்களின் எண்ணம் அல்லது ஊகங்களுக்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல்/பெற்ற தீர்ப்புக்கு தடையாணை பெற முயற்சித்தல் போன்ற ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால், அவை அரசுத் தரப்பின் நடவடிக்கைகளாக அல்லாமல், மூன்றாம் தரப்பினரால் (Third Parties), அல்லது தனிநபர்களால் அல்லது சில சங்கங்களால் மேற்கொள்ளப்படும் சுயாதீன முயற்சிகளாக மட்டுமே கண்டிப்பாக இருக்கக்கூடும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

குறுக்கு வழியில் பதவிக்கு வர துடிக்கும் வெறியர்கள் ஆட்டம் அடங்கும் விரைவில்.....
ReplyDeleteதகுதி தேர்வு நடத்தாமல் தகுதி தேர்வு எழுதாமல் எந்த. நீதிமன்றமும் தகுதியில்லை என்று சொல்லாது. ஏற்கனவே தகுதி தேர்வுகள் தேர்வு பெற்ற மூத்த ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருப்பதை மறைந்து தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது.அப்பீல் செய்யப்படும். உச்ச நீதிமன்றம் வரை செல்வோம் நீதிபெறுவோம்.
ReplyDelete