திருக்குறள்
குறள் எண்:428
குறள்:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்:
அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்
Contentment is more than a kingdom
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.
2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.
பொன்மொழி :
பொறுமை கசப்பானது; அதன் கனி இனிமையானது.
Thought for the Day :
Learning is a treasure; you can take it with you wherever you go.
பொது அறிவு :
1 . தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடின் தற்போதைய எண்ணிக்கை எவ்வளவு?
1364.
2. உலக பூச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜுன் 6.
English words :
Generous – Liberal, தாராளமான.
Hesitate – Doubt, தயங்கு.
NMMS :
36 மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பும், 24 மீ உயரமுள்ள ஒரு இணைகரத்தின் பரப்பும் சமம் எனில், இணைகரத்தின் அடிப்பக்க அளவு என்ன?
1. சதுரத்தின் பக்கம் = 36 மீ
சதுரத்தின் பரப்பளவு = a2
= 36 * 36 = 1296 மீ2
2. சதுரத்தின் பரப்பளவு = இணைக்கரத்தின் பரப்பளவு = 1296 மீ2
இணைக்கரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் * உயரம் = 1296
அடிப்பக்கம் * 24 = 1296
அடிப்பக்கம் = 1296 / 24 = 54 மீ
விடை : 54மீ
புவியியலும் சுற்றுசூழலும் :
பூமி தனது அச்சில் சுழல்வதால் பகலும் இரவும் ஏற்படுகின்றன.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் உருவாகின்றன.
ஜூன் 15
நீதிக்கதை
"நேர்மையான மாணவி "
ஒரு பள்ளியில் கவிநயா என்ற மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் உண்மையே பேசுவாள்.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, பள்ளி மைதானத்தில் ஒரு அழகான பேனா கிடந்தது. அது மிகவும் விலையுயர்ந்த பேனாவாக இருந்தது. கவிநயாவின் நண்பர்கள் சிலர், "இதைக் கண்டுபிடித்தது நீதானே! நீயே வைத்துக்கொள்" என்றார்கள்.
ஆனால் கவிநயா, "இல்லை. இது யாரோ ஒருவருடைய பொருள். அவரிடம் சேர வேண்டும்" என்றாள். உடனே அந்தப் பேனாவை ஆசிரியரிடம் கொடுத்தாள்.
மறுநாள் ஒரு மாணவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்தான். "என் அப்பா வாங்கிக் கொடுத்த பேனா தொலைந்து விட்டது" என்றான். ஆசிரியர் கவிநயா கொடுத்த பேனாவை அவனிடம் கொடுத்தார்.
அந்த மாணவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆசிரியரும் கவிநயாவைப் பாராட்டி, "நேர்மை என்பது மனிதனின் மிகப் பெரிய செல்வம்" என்றார்.
அன்று முதல் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் கவிநயாவைப் போல நேர்மையாக இருக்க முயன்றனர்.
நீதி:
**"நேர்மையே சிறந்த செல்வம்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி