மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா,முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
பள்ளி,கல்லூரி கல்வியைத் தொடர முடியாதவர்கள், பணிபுரியும் நபர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உயர்கல்வியை நெகிழ்வு முறையில் தொடர விரும்புவோர் அனைவருக்கும் தொலைதூரக் கல்வி படிப்புகள் வரப்பிரசாதமாக அமைகின்றன.
இந்நிலையில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி