கல்வியியல் கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2026

கல்வியியல் கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் கலந்தாய்வு

அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் சேரு​வதற்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு இன்று தொடங்​கு​கிறது.

2026-27-ம் கல்வி ஆண்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்​தது. மொத்​தம் 5,900 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர். இதைத் தொடர்ந்​து, மாணவர்​களின் தரவரிசைப் பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், மாணவர்​கள் தங்​கள் விருப்​பக் கல்​லூரியை தேர்வு செய்​வதற்கான ஆன்லைன் கலந்​தாய்வு இன்று தொடங்குகிறது. இக்​கலந்​தாய்வு 10-ம்தேதி வரை நடை​பெறும். மாணவர்களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை 14-ம் தேதி ஆன்​லைனில் வழங்​கப்படும். www.twise.ac.in என்ற இணை​யதளத்தில் இருந்து அவர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​வி​யியல் கல்​லூரி​களில் ஆக.17 முதல் 21-ம் தேதிக்​குள் சேர வேண்டும். திட்​ட​மிட்​டபடி, அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வியியல் கல்​லூரி​களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆக.24-ம் தேதி தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி