கல்வித்துறையில் 'எமிஸ்' பதிவேற்றம் உள்ளிட்ட ஆன்லைன் பணிகளால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக தி.மு.க., ஆட்சியில் புகார் எழுந்தது.
இதனால் ஆன்லைன் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'அசிஸ்டெண்ட் இன்ஸ்ட்ரக்டர்' (ஏ.ஐ.,) என்ற கணினி உதவியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் 'அவுட்சோர்ஸ்' அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் தொடக்க, நடுநிலையில் குறைந்தது 3 பள்ளிகளுக்கு ஒரு ஏ.ஐ., நியமிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சார்ந்த பணிகளுடன், ஹைடெக் லேப்களையும் கண்காணிக்கும் வகையில் பணிகள் ஒதுக்கப்பட்டது.
இதனால் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பணிகள் குறைந்து கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஆன்லைன் பணிகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: ஏ.ஐ.,க்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப அருகாமை பள்ளிகளுக்கு மாறுதலில் சென்று விட்டனர். இதனால் அவர்கள் கவனிக்க வேண்டிய ஆன்லைன் பணிகளை வேறு வழியின்றி ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர்.
'எமிஸ்' பதிவேற்றம், மாணவரின் ஆதார் அப்டேட் உள்ளிட்ட இப்பணிகளிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆன்லைன் பதிவேற்றப் பணிகள் மீண்டும் சுமையாக மாறிவிட்டது. கற்பித்தலில் கவனம் செலுத்துவது சவாலாக உள்ளது. அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஆசிரியர்க்ளுக்கு மற்றும் கல்வித்துறைக்கு பணிச்சுமை வந்தால் மட்டுமே ஏ.ஐ. எங்கே என்று தேடுவார்கள் , அவர்களுடைய பணிச்சுமை , மற்றும் மிக சொற்ப ஊதியம் , போக்குவரத்துக்கு படி இல்லை அதை பற்றி யாராவது அரசுக்கு கூறியதுண்டா ?மூன்று ஆண்டுகளாக எமிஸ் வருகை பதிவேடு பராமரித்த நிலையில் அதை தற்போது நீக்கியதை யாராவது அரசிடம் கேட்டனாரா ?மிகவும் குறைந்த சம்பளத்தில் (9700 ரூபாய் ,) மே மாதம் ஊதியம் இல்லை , ஆனால் மாற்று சான்றுதல் பனி மாணவர்குளுக்காக , புதிய மாணவர் சேர்க்கை பனி பணிபுரிகின்றனர் .அவர்களுக்கான ஊதிய உயர்வு பற்றி அரசிடம் கோரிக்கை வைத்தீர்களா
ReplyDeleteமேலும கணினி ஆயவகங்களை சிறப்பாக பராமரிப்பதே அவர்குளுடைய முக்கிய பணிகள் , கூடுதலாக ஏமிஸ் யூடிஸ் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான அலுவலக பனி , மாணவர்களுக்கான தேர்வு சார்ந்த நகல் எடுக்கும் பனி , மற்றும் ஏராளமான பணிகள் ,பணிகள் செய்தும் , மேலும் அதிகமான காலி பணியிடங்களையும் சேர்த்து அதிகமான நபர்கள் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் கூடுதலாக வேலை பார்க்கும் அவலம் .தொழிலார் சட்டப்படி நாள் ஒன்றுக்கு 750 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் , மற்ற துறைகளை உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு18000 வழங்கப்படுகின்றன
ReplyDelete