ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் 31.10. 2026க்குள் IFHRMS இல் பதிவு செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2026

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் 31.10. 2026க்குள் IFHRMS இல் பதிவு செய்ய உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் 31.10. 2026க்குள் IFHRMS இல் பதிவு செய்ய  விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளில் விதி 7(3)ல் வரையறை செய்யப்பட்டவாறு ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டு திட்டம் IFHRMS களஞ்சியம் செயலி வாயிலாக 31.10.2026க்குள் உள்ளீடு செய்யுமாறு பார்வை 3 இல் கண்டுள்ள அரசாணையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை 31.10.2026 க்குள் ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டு திட்டம் IFHRMS களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்து அதன் விவரத்தினை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை) தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விபரங்கள் முழுமையாக எவரும் விடுபடாதவண்ணம் IFHRMS களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்தபின் அதன்

விவரத்தினை பார்வை-4ன் படி பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பும் வண்ணம் அறிக்கை தயார் செய்து 02.11.2026 அன்று தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி