மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனமான BEL-ல் 350 பொறியாளர் பணியிடங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2026

மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனமான BEL-ல் 350 பொறியாளர் பணியிடங்கள்!

 சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் ப்ரோபஷனரி இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 350 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Probationary Engineer (Electronics)

காலியிடங்களின் எண்ணிக்கை: 200

கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering Graduate in Electronics / Electronics and Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication படித்திருக்க வேண்டும். 

Probationary Engineer (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering Graduate in Mechanical படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 13 லட்சம் (ஆண்டுக்கு)

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://g06.tcsion.com/EForms/configuredHtml/33192/103061/uPVtXzjwivanf3RWlN/Index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ், ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 1180, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2026

இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி