பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரவும், விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் வகையிலும் ஏற்கனவே உள்ள இரண்டு பாட வேளைகளுடன் கூடுதலாக உடற்கல்விக்கு ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை நிகழ்கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு மூன்று பாட வேளைகளும்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பாடவேளைகளும் உடற்கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் 25 நிமிடங்கள் நூலகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் வாரம் ஒரு பாடவேளை நூலகப் பயன்பாடு மற்றும் விழுமியக் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.முத்துக்குமரன் "இதுவரை நூலக பயன்பாட்டுக்காக பாடவேளை ஒதுக்கீடு செய்யப்படாததால் மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தார்கள். ஆனால், தற்பொழுது தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் 25 நிமிடங்கள் தினந்தோறும் நூலகப் பயன்பாட்டிற்கும், விழுமியக் கல்விக்கும் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் வாரம் ஒரு பாடவேளை நூலகப் பயன்பாட்டுக்கும் விழுமியக் கல்விக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மிகுந்த வரவேற்புக்கு உரியது. இதன் மூலம் மாணவர்கள் சுழற்சி முறையில் இந்த பாட வேளைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிப்பார்கள். இதனால் அவர்களுடைய வாசிப்புத் திறன் மேம்படும். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் தனது பாடநூல்களை வாசிப்பதற்கு ஏதுவாக அமையும். இதனால் இடைநிற்றல் குறைக்கப்பட்டு மாணவர்கள் முழுமையாக பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர்வார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி