12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2012

12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல்.

கல்வியின் தரத்தை உயர்த்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்ய வல்லுநர் குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அவர் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள். கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல், தேவைப்படும் முக்கியமான கல்விகள் ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்-4,207, பட்டதாரி ஆசிரியர்கள்-17,380, சிறப்பு ஆசிரியர்கள்-865, வேளாண் ஆசிரியர்கள்-25.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி