தொடக்கக்கல்வி -ஆங்கில வழிவகுப்புகள்- அரசு / ஊராட்சிஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2012

தொடக்கக்கல்வி -ஆங்கில வழிவகுப்புகள்- அரசு / ஊராட்சிஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொருமாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாகஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் 2012 -13 ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில், ஊரகப் பகுதியில் இயங்கும் 10 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து, அப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும் ஆய்வு செய்து அப்பள்ளிகளின் விவரப்பட்டியல் இயக்குனருக்குஅனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி