கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2012

கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!

கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட்23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை.( இவ்வறிப்பினை நம் இணையதளத்தில் மிக தெளிவாகநேற்றே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .)இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதன்மூலம், முந்தைய ஆட்சியில்அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய்திருப்பி தரப்படுமா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி