8 அரசு பலவகை தொழிநுட்ப கல்லூரிகளில் புதிதாக 410 பணியிடங்கள் உருவாக்கி தமிழக முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2012

8 அரசு பலவகை தொழிநுட்ப கல்லூரிகளில் புதிதாக 410 பணியிடங்கள் உருவாக்கி தமிழக முதல்வர் உத்தரவு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 420 நாள்.18.07.2012 பதிவிறக்கம் செய்ய...

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், உயர்கல்வியை மேலும் மேம்படுத்தும் வகையில், தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை,தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில்புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியிலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்று ஒவ்வொரு துறைக்கும் ஒரு துறைத் தலைவர் பதவி வீதம் 5 துறைத் தலைவர் பணியிடங்கள், விரிவுரையாளர் பணியிடங்கள் 18, நூலகர் பணியிடம் 1, உடற்பயிற்சி இயக்குநர் பணியிடம் 1, தொழிற்கூட கற்பிப்பவர் பணியிடங்கள் 2, திறன் பெற்றவர்/ஆய்வுக் கூட உதவியாளர் பணியிடங்கள் 15, உதவியாளர் பணியிடங்கள் 2, இளநிலை உதவியாளர் பணியிடங்கள்2, தட்டச்சர் பணியிடம் 1, காவலர் பணியிடங்கள் 3, தோட்டக்காரர் பணியிடம் 1, பெருக்குபவர் பணியிடம் 1,சுத்தம் செய்பவர் பணியிடம் 1 என மொத்தம் ஒவ்வொரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கும் 53 பணியிடங்கள் வீதம் 7 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 371 பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 15 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதேபோன்று மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, அம்பலகாரன்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் பொருட்டு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் ஆகிய ஒவ்வொரு துறைக்கும் ஒரு துறைத் தலைவர் பதவி வீதம் 4 துறைத் தலைவர் பணியிடங்கள்,விரிவுரையாளர் பணியிடங்கள் 12, நூலகர் பணியிடம் 1, உடற்பயிற்சி இயக்குநர் பணியிடம் 1, தொழிற்கூட கற்பிப்பவர் பணியிடங்கள் 2, திறன் பெற்றவர்/ஆய்வுக் கூட உதவியாளர் பணியிடங்கள் 10, கண்காணிப்பாளர் பணியிடம் 1, உதவியாளர் பணியிடம் 1, காவலர் பணியிடங்கள் 2, தோட்டக்காரர் பணியிடம் 1, பெருக்குபவர் பணியிடங்கள் 2, சுத்தம் செய்பவர் பணியிடங்கள் 2 என மொத்தம் 39 பணியிடங்களை தோற்றுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.8 அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 410 பணியிடங்களை தோற்றுவித்து, அதற்கென 16 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ள தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைமூலம் இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களால் நல்ல தரமான கல்வி அளிக்க வழிவகை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி