தேர்வு நேரத்தை அதிகரித்திருக்க வேண்டும் : ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2012

தேர்வு நேரத்தை அதிகரித்திருக்க வேண்டும் : ஆசிரியர்கள்

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிஇடி இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.    150 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வினை எழுத ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.தேர்வைஎழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் பலரும், வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வெழுதிய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் வருந்தினர்.150 கேள்விகளுக்கும் விடைகளை செயல்முறையில் கண்டுபிடித்துபதிலளிக்கும் வகையில் அமைந்திருந்ததால், ஒன்றரை மணிநேரம் என்பது மிகவும் குறைவாகும்.    பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கான வினாத்தாளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதியத்துக்கு மேல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி