ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 6.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.வெற்றி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேரம் போதாது என்று தேர்வு எழுதிய அத்தனை ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததால் அரசு இந்த சலுகையை அளித்து தேர்வு நேரத்தையும் 3 மணி நேரமாக உயர்த்தி இருக்கிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர் வேலை வழங்கப்படும்.1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமனம்இதற்கிடையே, இந்த தகுதித்தேர்வு மூலமாக 1,134 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வழக்கமாகஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக போட்டித்தேர்வு நடத்தும். ஆசிரியர் பயிற்றுனர் பதவியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானது என்பதால் அந்த காலி இடங்களையும் தகுதித்தேர்வுமூலமாகவே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.தற்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிரப்பப்படுமா? அல்லது அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ள மறு தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி