பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு - மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2012

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு - மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு.

APPLY RE-TOTALING CLICK HERE...
ஜூன், ஜூலையில், எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., -ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,க்கு, உடனடித் தேர்வு நடந்தது. தேர்வில், மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், மேலே உள்ள நமது லிங்க்ஐ கிளிக் செய்து, 27ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாய் வீதம்; ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் வீதம், கட்டணம் செலுத்த வேண்டும். பிளஸ் 2 உடனடித் தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்று, மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டல் கோரி, 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறு மதிப்பீட்டிற்கு, மொழிப் பாடத்திற்கு, 1,010 ரூபாய். இதர பாடம் ஒவ்வொன்றிற்கும், 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு, மொழிப்பாடம், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு, தலா 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்துச்சீட்டை பதிவிறக்கம் செய்து,சம்பந்தபட்ட வங்கியில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி