குரூப்-4 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

குரூப்-4 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதா?

ஜூலை 7ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக, போலீஸ் காவலில் உள்ளவர் தகவல் தெரிவித்துள்ளதால், இத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 10,718 காலிப் பணியிடங்களுக்கு, ஜூலை 7ம் தேதி, குரூப்-4 போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வை, 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்.கடந்த 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எட்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இதில், சதீஷ்குமார் என்பவர், குரூப்-4 கேள்வித்தாளும் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டதாக, போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால், இத்தேர்வும் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் கூறியதாவது: ஒவ்வொருதேர்வு முடிந்ததும், அதைப்பற்றி ஏதாவது கூறுவார்கள். இதற்கு முன், இதேபோல் பலர் வதந்தியை கிளப்பினர். அவையெல்லாம் உண்மையில்லை என்பது, பின் தெரிந்தது. விசாரணையில், குரூப்-4 கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதாக ஒருவர் கூறினாலும், தேர்வு நடப்பதற்கு முன் எந்த தேதியில் வெளியானது, அதில், யார், யாருக்கு தொடர்பு உள்ளது, என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக, காவல்துறை அறிக்கை வந்தால் தான், எதுவுமே கூற முடியும். குரூப்-4 கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியாகி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு நடராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி