பள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2012

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும்மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மாதமே இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய பயிற்சிக்கு Assessment of Speaking and Listening Skills எனப் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிமிடங்கள் இதற்கான தேர்வு நடத்தப்படும் என்றும், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பேச்சு மற்றும் கவனிப்புத் திறமையை கண்டறிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு புரியும் வகையிலான இடம், பொருள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அடுத்ததாக, மாணவ, மாணவிகளே தேர்வு செய்யும் வகையில் தலைப்புகள் வழங்கப்பட்டு, அதன் மீது அவர்கள் பேச வேண்டும். கடைசியாக, படக் காட்சி அல்லது தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் மீது மாணவர்கள் குழுவாக 3 நிமிடத்திற்கு விவாதிக்க வேண்டும்.ஒருவேளை மாணவர்கள் பேச முடியாமல் திணறினால், அந்த மாணவருக்கு கூடுதல் அவகாசம் வழங்கி ஆசிரியர் தயார்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் கவனிப்புப் பயிற்சி, வரும் காலங்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி