தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2012

தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்வு

எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகத்தின்கீழ், பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு, 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், 5,000 ஊழியர், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 1,500 ஊழியர்களுக்கு, 15 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள, 3,500 ஊழியர், பணியில் சேர்ந்து, சில ஆண்டுகளே ஆவதால், அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. 1,500 பேருக்கு, சம்பள உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கக பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் கபிலன், நன்றி தெரிவித்துள்ளார்.தொகுப்பூதிய ஊழியர்களை, பணிவரன் முறை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி