முதுகலை ஆசிரியர் தேர்வு:நவ. 15க்குள் புதிய பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2012

முதுகலை ஆசிரியர் தேர்வு:நவ. 15க்குள் புதிய பட்டியல்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், குளறுபடியான கேள்விகளுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, அதன் அடிப்படையில், புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட உத்தரவிட்டது.அதன்படி, புதிய பட்டியலை தயாரிக்க, கூடுதலாக, 3,219 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யும் பணி, 32 மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது. இன்றும், தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. நவம்பர் 15ம் தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி