ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்.,சில் பதிய திட்டம் -Dinamalar news - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2012

ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்.,சில் பதிய திட்டம் -Dinamalar news

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்யும் திட்டம், அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், பணிக்கு தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் இருந்தும் தேர்ச்சி சதவீதம் குறையும்போது உண்மை நிலை குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் கல்வித்துறை தவிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் பதியும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறையினர் கூறியதாவது:பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து உதவி தொடக்க கல்வி அலுவலருக்கும், அவரிடம் இருந்து தொடக்க கல்வி அலுவலருக்கும், பணிக்கு வந்துள்ள ஆசிரியர் விவரங்கள் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும். அதை முதன்மைகல்வி அலுவலர், உயரதிகாரிகளுக்கு அனுப்புவார். சென்னையில் இருந்து கல்வித்துறை இயக்குனர், அவ்வப்போது ஆய்வு செய்வார். இத்திட்டம், கடலூர், தர்மபுரி மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டம்விரிவுபடுத்தப்படும், என்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது,""பல்வேறு பணிகளுக்காக மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர் விபரம் சேகரிப்பது வழக்கம். இம் முறை, எஸ்.எம்.எஸ்., திட்டத்துக்காக ஆசிரியர்கள் பெயர், முகவரி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. திட்டம் அமலாகும் முன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். அடுத்தாண்டு துவக்கத்தில், திருப்பூர் மாவட்டத்தில் அமலாகும் என தெரிகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி