அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்

கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன
ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில்
TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையில்  TET தேர்வில் 5 ஆண்டுக்குள் கண்டிப்பாக
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில் அரசு உதவி பெ றும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5
ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத
காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் -என்ற தினகரன் செய்தியால் அரசு நிதி உதவி பெ றும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் Posting நிலைக்குமா என்று குழப்பம் அடைந்துள்ளனர்.
TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளியிலயே வேலை வாய்ப்பு கிடைக்கும் போது அரசு நிதி உதவி பள்ளி பணியை ஆசிரியர்கள் விரும்பமாட்டார்கள்.
இதனால் அரசு நிதி உதவி பெ றும் பள்ளிகளில்
ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால்  மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இது மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால்
விரைவில் கல்வி துறை இயகுனரகம் மூலம்
தெளிவுரை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.

1 comment:

  1. True. The teachers who areworking there already in service are even denied to given post, because of this and teachers from outside are appointed for the vacant post. So TET is a good source to appoint meritorious candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி