பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாகஎம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்துஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறஅணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணபலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. எம்.எட்., கல்வித்தகுதியை தொலைத்தூரக் கல்வி வாயிலாக பெற இயலாத சூழ்நிலை உள்ளது எனவும், ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி., போன்ற கல்வித்தகுதிகள் தொலைத்தூரக் கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாணை எண்.1024 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாள்.09.12.1993ன் படி அனுமதிக்கப்பட்ட தகுதியான உயர்க்கல்வி எம்.எட்., என்பதற்கு பதிலாக, எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பி.எச்டி பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்விற்கான உயர்க்கல்வியாக கருதி ஊக்க ஊதியம் வழங்கலாம் என குறிப்பிட்டுள்ளதால் எம்.எட்., உயர்க்கல்விக்கு வழங்கப்படும்அதாவது 09.12.1993 நாள் முதல் எம்.பில்., / பி.எச்டி கல்வித் தகுதிக்கும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி