முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிப். 2-இல் நூதனப் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிப். 2-இல் நூதனப் போராட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிப்.2-இல் மொட்டை அடித்து கோட்டை நோக்கிச் செல்லவுள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் வே. மணிவாசகன் தெரிவித்தார்.தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் 1978-இல் மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக அரசாணை எண் 720 வெளியிடப்பட்டது. இதிலுள்ள விதிமுறைகளால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறும் நிலையுள்ளது.ஆனால், 1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பணியில் சேர்ந்தவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு முன்பாக பணியமர்த்தப்பட்டவர்கள் எந்தவித பதவி உயர்வும் இல்லாமேலேய ஓய்வு பெறுகின்றனர்.இதற்கு பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகமே பொறுப்பு. அரசாணையை திருத்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை.எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் சென்னையில் கூடி மொட்டையடித்து கோட்டை நோக்கிச் செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தப் போராட்டத்தில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்று மொட்டையடிக்கவுள்ளனர். ஆயிரம் பெண் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளனர் என்றார் அவர்.தருமபுரி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மொட்டையடிக்க உள்ளதாக மாவட்டத் தலைவர் பி. தங்கவேல் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் அப்துல் அஜீஸ், மண்டலச் செயலர் இரா. செல்வம், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் தங்கவேல், முன்னாள் பொறுப்பாளர் சி.மணி, மாவட்ட பொருளாளர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி