வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2013

வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா கூறினார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அவர் அண்மையில் பொறுப்பேற்றார். பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய படிப்புகள் குறித்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு சமுதாயக் கல்லூரி வீதம் மொத்தம் 32 சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.இதில் முதல்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரிஆகிய 5 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் தொழிற்பயிற்சி தொடர்பான படிப்புகளை நடத்துவதோடு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும். அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 2 மையங்கள் திருச்சி, கோவையில் தொடங்கப்படுகின்றன.தொழிலாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்: எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கேமராமேன் உள்ளிட்ட தொழில்களில் முறையான படிப்புகள் இன்றி பல தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான சிறப்பு சான்றிதழ் படிப்புகளை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும், பணியிலிருந்துகொண்டே படிப்பவர்களுக்கும் வழங்கப்படும் மேற்படிப்பை சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்று உறுதியேற்றுள்ளோம்.திறந்தநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றிருந்தால் அரசுப் பணிக்கு அந்தப் படிப்பு தகுதியில்லாத நிலை உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறையினருடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதேபோல், இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பைத் தொடங்குவது குறித்தும் உயர் கல்வித் துறையோடு ஆலோசனை நடத்தப்படும்.திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இப்போது 4 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என 110 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துப் படிப்புகளுக்கான புத்தகங்களும் சி.டி. வடிவில் வழங்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி