தமிழ் வழியில் பி.எட் படித்தவர்கள் யார்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2013

தமிழ் வழியில் பி.எட் படித்தவர்கள் யார்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3438 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கஅரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த மே 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது. 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் எழுதினர். 3103 பேர் தேர்ச்சி பெற்றனர். டிசம்பர் 11ம் தேதி பணிநியமனம் பெற தகுதி உள்ளவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் உள்ளபடி முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது.அதே போல தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டம், பி.எட் பட்டம் ஆகியவற்றை தமிழ் வழியில் படித்துள்ளதாக விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரசு உத்தரவுப்படி 20 சதவீதம் பணி நியமனம்வழங்கப்பட வேண்டியுள்ளது. இதையடுத்து எந்தெந்த பல்கலைக் கழகங்கள் தமிழ் வழியில் முதுநிலை மற்றும் பி.எட் பட்டங்களை நடத்துகின்றன என்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெறும்முயற்சியில் இறங்கியுள்ளது.தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் (பி.எட் பல்கலை) தனியார் பி.எட் கல்வி நிறுவனங்கள் தமிழ் வழியில் பி.எட் வகுப்புகளை நடத்தி பட்டம் வழங்கி இருக்கிறதா என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிய விரும்புகிறது. அதனால் பி.எட் பட்டம் நடத்தும் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் எழுதி விவரம் கேட்டுள் ளது. வரலாறு, வணிகவி யல், பொருளியல் பாடங் களை தமிழ் வழியில் படித்துள்ள முதுநிலைப் பட்டதாரிகளுக்கான  காலிப் பணியிடங்கள்150 வரை உள்ளன. பட்டியல் பெறப்பட்டதும், இந்த பணியிடங்கள்நிரப்பப்படும்.

1 comment:

  1. Sir,
    What about other selected pg candidates? when the counselling will be conducted?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி