பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2013

பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டுகிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.அடிப்படை உரிமைஇந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது.அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மனு தள்ளுபடிஅடிப்படை வசதிகள் இல்லாத, முறையாக அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 1993–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஏராளமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதித்தேர்வு நடத்துவதில் தவறு இல்லை. இந்த தேர்வுஅவர்களது வேலை வாய்ப்பினை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி