மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு - முதன்மை கல்வி அலுவலர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2013

மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அவர்கள் பற்றிய விபரங்களை ஜன.28க்குள் பதிய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ரத் தினம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 80 அரசு பள்ளிகள், 135 தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண் டனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகண்ணு தலைமை வகித்து பேசுகையில், ‘அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்திருக்க வேண்டும். வருகிற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள்பாடுபட வேண் டும். மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படஉள்ளது. அவர்கள் பற் றிய விவரங் களை உடனடி யாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண் டும். பள்ளிகளில் குடியரசு தின விழா வை சிறந்த முறையில் நடத்த வேண்டும். இன்று (25ம் தேதி) தேசிய வாக் காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி கொண் டாட வேண்டும்‘ என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் குமார தாஸ், ஆபிரகாம், பள்ளி துணை ஆய்வாளர் சங்கரய்யா, அனைவருக்கும்இடைநிலை கல்வி திட்ட அலுவலர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி