Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - புதிய நியமனங்கள் - TRB மூலம் 2009-2010ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நியமனம் செய்யப்பட்ட கணித மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து உத்தரவு.

0 Comments

DSE - MATHS SUBJECT - REGULATION ORDER ISSUED FOR 2009-10 TRB APPOINTMENT BT ASSTS REG - REGULATION ORDER CLICK HERE...

DSE - SCIENCE SUBJECT - REGULATION ORDER ISSUED FOR 2009-10 TRB APPOINTMENT BT ASSTS REG - REGULATION ORDER CLICK HERE...

சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments

கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.
* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும்.
* மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மருத்துவக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, ரூ.4,727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், பொது வரிகளிலிருந்து, கல்விக்கு ஒதுக்கும் தொகை, 3% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* நாளந்தா பல்கலைக்கழகத்தை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதைத்தவிர, SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான உதவித்தொகைதிட்டங்கள் பற்றி மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

0 Comments

2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாகதெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி.

0 Comments

ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு,அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றா‌ர்.இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ‌சித‌ம்ப‌ர‌ம் கூ‌றினா‌ர்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

0 Comments

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.கடந்த ஆண்டுதான் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வரி செலுத்துபவர்களுக்கு ரூ.2,500 வரி த‌ள்ளுபடி.

சிறப்பாசிரியர்கள் பணி தொடருமா? குழப்பத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் !

0 Comments

14 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் மே மாதம் இறுதியில் தகுதி தேர்வு

3 Comments

முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

0 Comments

"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.அவரது அறிவிப்பு: தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்கிட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும், முழுவீச்சில் செய்திடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தேர்வு மையங்களில், பறக்கும் படை குழுவினர், அவ்வப்போது சென்று, தேர்வுகளை கண்காணிப்பர். மாநிலம் முழுவதும், 4,000த்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள், தேர்வுப் பணிகளை கண்காணிப்பர். அறிவியல் மற்றும் கணிதப்பாட தேர்வுகளின் போது, வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக இருப்பர்.அண்ணா பல்கலை அலுவலர்களும், தேர்வு மையங்களை பார்வையிடுவர். தேர்வு நேரங்களில், பள்ளியைச் சேர்ந்த தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் யாரும், தேர்வு மைய வளாகத்தில் இருக்கக் கூடாது.துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாளை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவரைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடும் குற்றங்களாகும். இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு, உரியதண்டனைகள் வழங்கப்படும்.கடந்த ஆண்டு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு, 229 மாணவர், தண்டனை பெற்றனர். தேர்வு மையங்களில், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தேர்வு மையத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.சிறைவாசிகள், சிறை வளாகத்திலேயே, தேர்வை எழுத, சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, புழல் சிறை வளாகத்தில், 40 சிறைவாசிகள், இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். சிறை வளாகத்திலேயே, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

2 Comments

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழகஅரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%

0 Comments

மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2, பொதுத் தேர்வுகள்நாளை துவங்குகின்றன. மொத்தம், 8 லட்சத்து, 4,534 மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர். மாணவர், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேரும்; மாணவியர், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 746 பேரும் எழுதுகின்றனர். மாணவரை விட, மாணவியர், 56 ஆயிரத்து, 958 பேர், கூடுதலாக எழுதுகின்றனர்.மொத்த மாணவ, மாணவியரில், 69.60 சதவீதம் பேர், தமிழ் வழியில், அனைத்து தேர்வுகளையும் எழுதுகின்றனர். மாணவர், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 903 பேரும்; மாணவியர், 3 லட்சத்து, 8,061 பேரும், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். மொத்தத்தில், 5.59 லட்சம் பேர், தமிழ்வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில் தேர்வை எழுதுகின்றனர்.ஆங்கில வழியில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 570 பேர் எழுதுகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு, நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 69 சதவீதம் பேர், தமிழ் வழியில், பிளஸ் 2 தேர்வை எழுதுவது, எதிர்காலத்தில், அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளில் சேர, ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும்.தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற, குரூப்-4 நிலையிலான அரசுப் பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தாலே போதும். இந்த மாணவ, மாணவியர் அனைவரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும், தமிழ் வழியில் எழுதியிருப்பர். மேலும், பிளஸ் 2 தகுதி நிலையில், அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும், தமிழ் வழி கல்வி, உதவியாக இருக்கும்.ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சென்னை நகரில், 406 பள்ளிகளில் இருந்து, 51 ஆயிரத்து, 531 பேரும், புதுச்சேரியில் 107 பள்ளிகள் சார்பில், 12 ஆயிரத்து, 611 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.சென்னையில், 140 மையங்களும், புதுச்சேரியில், 30 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி சேர்த்து,2,020 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வு மூலம்,48 ஆயிரத்து, 788 பேர் எழுதுகின்றனர்.

தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்.

0 Comments

தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில்,"ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா, விளையாட்டு,இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி, பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில், ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில்,"கிரேடு" வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ" கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி" கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு.

0 Comments

வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.மீதம் உள்ள, 185 பணியிடங்களை நிரப்ப, நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள்விவரம், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்படாது. இவ்வாறுசெயலர் கூறியுள்ளார்.

உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?

0 Comments

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர்உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...?முன்புறத்தில், டிரைவருக்கு வலதும், இடதுமாக 2 அல்லது 3 பேர், பின்புற இருக்கையிலும், இடையில் அமைக்கப்பட்டுள்ள கட்டையிலுமாகச் சேர்த்து 7 அல்லது 8 பேர் என மொத்தம் பத்துக் குழந்தைகள், கம்பிகளையும், உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு அன்றாடம் பயணிக்கிறார்கள். பார்க்கும்போதே பதறுகிறது மனசு...ஆனால், இப்படித்தான் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விட்டு, குதூகலமாக "டாட்டா" காட்டுகிறார்கள் பெற்றோர்கள். கேட்டால்,"நம்ம சக்திக்கு ஆட்டோவுலதான் அனுப்ப முடியும்" என்பார்கள்;ஆட்டோக்காரர்கள், "பெட்ரோல் விக்கிற விலைக்கு இத்தனை பேரை ஏத்திட்டுப் போனால்தான் கட்டுப்படியாகுது" என்பார்கள்.ஆட்டோவில் புளி மூட்டைகளைப் போல, குழந்தைகளை அடைத்துக் கொண்டு போனாலும், வாங்கும் கட்டணத்தில் இவர்கள் குறைவு வைப்பதில்லை; ஆபத்தான வகையில் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலும், வேகத்தையும் குறைப்பதில்லை. ஏதேனும் ஒரு விபரீதம் நிகழும் வரை, இத்தகைய விதிமீறல்கள் யாரையும் உறுத்துவதில்லை.வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தினமும் ஆயிரம் வேலை இருக்கிறது. பத்திரிக்கையில் படம் பிடித்துப் போட்டால், இரண்டு நாட்களுக்கு நாலைந்து ஆட்டோக்களைப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்; மூன்றாவது நாளில் அவர்களின் மாமூல் பணிக்குத் திரும்பி விடுவார்கள்.ஆட்டோக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய், ஒரு மனுவைக் கொடுத்து விட்டு, மறுபடியும் தங்கள் அன்றாடப் பயணத்தைத் தொடர்வார்கள். இதில், ஆட்டோக்காரர்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை.மாணவ, மாணவியர்க்கான தனி போக்குவரத்தை உருவாக்காத அரசாங்கம், பல கோடி ரூபாய்களில் கட்டடங்கள் கட்டினாலும் தேவையான பஸ்களை இயக்க மறுக்கும் பள்ளி நிர்வாகங்கள், விதிமீறலைத் தடுக்காத போக்குவரத்துத்துறை அலுவலர்கள், சிக்கனம் என்ற பெயரில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத பெற்றோர்கள்... எல்லோருமே தவறிழைப்பவர்கள்தான்.இத்தனை பேருடைய தவறுகளால், ஒரு மழலை கூட ரத்தம் சிந்தி விடக்கூடாது என்பதுதான் நமது மன்றாட்டு.

பள்ளிக்கல்வி - 2009-10 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட RMSA உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூ.1900ல் இருந்து ரூ.2400ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

0 Comments

GOVT LTR.41186/C2/12, DT.18.02.2013 - RAISED GP.2400/- FOR RMSA LAB ASSISTANTS ORDER ISSUED. CLICK HERE...

மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

0 Comments

மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்  மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன், மாண்புமிகு தமிழக முதல்வர்அம்மா அவர்களிடமும், மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
CLICK HERE TO DOWNLOAD THE MODEL REQUEST LETTER

வழக்கு எண்: MP(MD)No:2 of 2012in W.P.(MP)No:9218/2012. Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்

0 Comments

CLICK HERE-PAY BAND CHANGE TO SG TRS GOVT GIVE LETTER TO COURT

பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

0 Comments

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகியமூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.சுகாதாரத்துறை அமைச்சராக திரு. கே.சி.வீரமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.பூனாட்சி கதர் கிராம தொழில்துறை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சர்கள் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில்  பதவியேற்க உள்ளனர்.நாளை பதவியேற்க உள்ள அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை வாய்ப்பிற் -காக தொலைத்தூரக் கல்வி வாயிலாக பயிலும் இளநிலை பட்டத்திற்கு சமமாக கருதி அரசாணை வெளியீடு

0 Comments

GO (MS) NO.25 HIGHER EDUCATION (K2) DEPT DATED.22.02.2013 - 5 year Integrated Programmes Offered by Annamalai University - Considered as Equivalent to the Corresponding Under Graduate - Order Click here...

ராணுவக் கல்லூரியில் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் சேரலாம்!

0 Comments

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்துபடிக்க 7-ஆம் வகுப்பு  மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இங்கு படிக்கத் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்புக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை  தமிழக அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்.டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும்13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2-1-2001க்கு முன்னதாகவும் 1-7-2002க்குப் பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது. ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அந்த மாணவர் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.இந்தக் கல்லூரியில் வரும் ஆண்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தேர்வு வருகிற ஜூன் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னையிலும் இத்தேர்வை எழுதலாம். ஆங்கிலம், கணிதம், பொது அறிவுஆகியவற்றிலிருந்து எழுத்துத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், பொது அறிவு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அக்டோபர் 7-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய வினாத்தாள் தொகுப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவுத்  தபால் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.400க்கும் ஸ்பீட் போஸ்ட் மூலம் பெற விரும்புபவர்கள் ரூ.450க்கும் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் பதிவுத் தபால் மூலம் விண்ணப் படிவங்களைப்பெற விரும்பினால் ரூ.355க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். ஸ்பீட் போஸ்ட் மூலம் பெற விரும்பினால் ரூ.405க்கு டிமாண்ட் டிராப்ட் பெற வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.விண்ணப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக), ‘தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,பிரேசர் பாலச் சாலை, விஓசி நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு மார்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தியது ஏன்?

0 Comments

தமிழக அரசின் பல்வேறு துறைகள், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சரிவர தராததன் காரணமாக, பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்று, பல்வேறு துறைகளில், பணியில் சேர்ந்தவர்களை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து, கலந்தாய்வு நடத்தி, புதிய உத்தரவை வழங்கியது. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள், சுருக்கெழுத்தர்களுக்கு, கடந்த மாதம், துறை வாரியாக, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை, தேர்வாணையம் வழங்கியது. பெரும்பாலானோர், சம்பந்தபட்ட துறைகளில், பணியில் சேர்ந்துவிட்டனர். வேலையில் சேரச் சென்ற இடத்தில், காலியிடம் இல்லை என்ற அதிர்ச்சியும், பலருக்கு ஏற்பட்டது. சில துறைகளில், காலி இடங்கள் இல்லாத நிலையிலும், ஒதுக்கீடு பெற்று வந்தவர்களை, வேலையில் சேர்த்துக்கொண்டது. காலியிடங்கள் இல்லாமல், வேலை கேட்டும், பலர், தேர்வாணையத்தை அணுகினர். இந்த குளறுபடிகளில் சிக்கிய, 500க்கும் மேற்பட்டோரை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து, புதிதாக கலந்தாய்வு நடத்தியது. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை, பணியாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல பேர், கடந்த மாதம் சம்பளம் பெற்றுள்ளனர். இந்த மாதத்திற்கும், விரைவில் சம்பளம் பெற உள்ள நிலையில், வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உத்தரவு வழங்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலையை சேர்ந்த, தட்டச்சர் மகேஸ்வரி கூறுகையில்,"கடந்த மாதம் துவக்கத்தில் பணியில் சேர்ந்து, ஒரு மாதம் சம்பளம் வாங்கிவிட்டேன். திடீரென, மீண்டும் கலந்தாய்வு என, கடிதம் அனுப்பினர். வேறு துறை, வேறு பணியிடம் என, கிடைத்தால்,பல பிரச்னைகள் ஏற்படும்" என்றார்.இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது: அரசுத் துறைகளில் இருந்து, சரியான காலியிடங்கள் எண்ணிக்கை வரவில்லை.இதுதான், ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் காரணம். எங்களுக்கு, காலியிடங்களை காட்டிவிட்டு, அந்த இடங்களில், கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர். இது தெரியாமல், வேலையில் சேரச் சென்றவர்களிடம், "காலியிடம் இல்லை" என, தெரிவித்து, திருப்பி அனுப்புகின்றனர். சில துறைகளில், காலி இடங்களை ஏற்கனவே நிரப்பிய போதும், கூடுதலாக, புதிய பணியாளர்களையும் சேர்த்துள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்து, புதிதாக உத்தரவு வழங்கவே, கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனால், பெரிய அளவிற்கு, யாருக்கும் பிரச்னை இல்லை. மேலும், இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு வழங்கும் கலந்தாய்வை, விரைவில் நடத்த உள்ளோம். அதற்கு முன்னதாக, முதலில் உத்தரவு வாங்கியவர்களின் பிரச்னையைசரிசெய்யவே, கலந்தாய்வு நடத்தப்பட்டது.இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives