சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2013

சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.
* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும்.
* மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மருத்துவக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, ரூ.4,727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், பொது வரிகளிலிருந்து, கல்விக்கு ஒதுக்கும் தொகை, 3% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* நாளந்தா பல்கலைக்கழகத்தை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதைத்தவிர, SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான உதவித்தொகைதிட்டங்கள் பற்றி மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி