மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2013

மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்படும்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் சார்பாக பல்வேறு புதிய படிப்புகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களுக்கு வசதியாக பி.எட். படிப்பும், சட்டம் தொடர்பான சட்ட சான்றிதழ் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பார் கவுன்சிலின் அனுமதி கிடைத்தால், எல்.எல்.பி படிப்புகள் தொடங்கப்படும் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.மேலும் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான கேந்திரிய வித்யாலயா பள்ளி மத்தியப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வரும் கல்வியாண்டில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.இதைத் தவிர தற்போது உள்ள வகுப்புகள் புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் சஞ்சய் குறிப்பிட்டார். படிப்புகள்மற்றும் வசதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக மார்ச் 2-ஆம் தேதி மத்திய பல்கலைக் கழகத்தில் கலாச்சார விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி