பள்ளிக்கல்வி பட்டியல் மாற்றத்தை கண்டித்து பாராளுமன்றம் முன்பு மறியல் போராட்டம் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

பள்ளிக்கல்வி பட்டியல் மாற்றத்தை கண்டித்து பாராளுமன்றம் முன்பு மறியல் போராட்டம் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

பொதுப்பட்டியலில் இருந்து தொழில் பட்டியலுக்கு பள்ளிக் கல்வியை மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதை கண்டித்து பாராளுமன்றம் முன்பாக மறியல் போராட்டம் நடக்க உள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட் டத் தலைவர் அந்தோணி ச்சாமி தலைமை வகித்தார். இயக்கப் புரவலர் பொன் ராஜ் முன்னிலைவகித்தார். மாநில துணைத் தலைவர் அய்யாச்சி, மாநில செயற் குழுஉறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தரா ஜன் கலந்து கொண்டனர்.மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் பேசியதா வது: மத்திய அரசு பள்ளிக் கல்வியில் தனியார் பங்களிப்பு கொள்கையை ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசு துவங்க உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில் 2,500 பள்ளிகளுக்கு தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அரசு பள்ளி களை மறைமுகமாக ஒடுக் கும் முயற்சியாகும். அனை வருக்கும் தரமான கட்டாய கல்வியை அளிக்க வேண் டும் என்பதை தட்டி கழிக்க வே தனியார் பங்களி ப்பு கொள்கையை அரசு கொ ண்டு வருகிறது. இதற் காக கல்வியை பொதுப்பட்டிய லில் இருந்து தொழில் பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றுகிறது. இதன்மூலம் தனியார் தான் அதிக அள வில் பயனடைவர்.இத னால் பணம் படைத்தோர், இல்லாதோர் என 2 பிரிவு கள் உருவாகும்.தனியார் பங்களிப்பு டன் உருவாகும் பள்ளிகளு க்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் குழந்தைகள் செல்ல முடியாது. எனவே தனியார் பங்களிப்பு கொ ள்கையை ரத்து செய்ய வே ண்டும். 6வது ஊதியக்குழு பரிந்துரையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படு த்த வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டம், ஆசிரியர் தகு தித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார் பில் ஏப்.4ம் தேதி புதுடில்லி பாராளுமன்றம் முன்பாக மறியல் போ ராட் டம் நடக்க உள்ளது. இதில் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். சிவகங்கை மாவட்ட தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிரு ந்து சுமார் 150 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி