ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்குவட்டி குறைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2013

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்குவட்டி குறைப்பு.

வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மார்ச் 25ம் தேதி மத்திய அரசின் தீர்மானத்தின்படி, பிபிஎப் வட்டி விகிதம்இப்போதுள்ள 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. 2013,14ம் நிதியாண்டு முழுவதும் இது அமலில் இருக்கும். புதிய வட்டி விகிதம் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டங்களை இயக்கி வரும் வங்கிகள், இதுகுறித்த அறிவிப்பை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறுஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி