22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2013

22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி்.

் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.  இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 64,435 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மேலும் 22,269 ஆசிரியர்கள், 1091 காவல் உதவி ஆய்வாளர்கள்,தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042, கூட்டுறவு வங்கிகளில் 3607, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்தால் 2,159 டாக்டர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. . மேலும் 43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் அரசின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் முனுசாமி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி