‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் சிலம்பப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2013

‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் சிலம்பப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் இணைப்புப் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் சிலம்பப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றதன் மூலம், தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதோடு மட்டுமன்றி, கற்றலில் ஆர்வமும் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர் மாணவர்கள்.வறுமை, ஆதரவின்மை உள்ளிட்ட குடும்ப சூழ்நிலை காரணமான பள்ளிக் கல்வியை பெற முடியாத குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இத்தகைய 15 இணைப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிலம்பாட்டம் மற்றும் கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைப் பயிற்சிகள் மூன்று மாத காலம் நடத்தப்பட்டன. மேலும் மாணவர்களுக்கான கணினி உள்ளிட்ட இதர கல்விப் பயிற்சிகளை அளிக்க 65 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பலன் பெற்று வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சிகள் கற்பதற்கான ஊக்கத்தை அளிப்பதோடு, மிகுந்த தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தது என்கின்றனர் மாணவர்கள்.இணைப்பு பள்ளிகளில் படித்த 335 மாணவர்கள், வரும் கல்வியாண்டில் நேரடியாக பள்ளிகளில் இணைந்து படிக்க உள்ளனர். படிக்கும் வயதில் வேலைக்கு செல்ல வேண்டிய அவலநிலை படிப்படியாக மாறி பாலைவனமாக இருந்த தங்களது வாழ்க்கை சோலைவனமாக மாறி வருவதாகதெரிவிக்கின்றனர் மாணவர்கள். மாணவர்கள் பயிற்சியில் காட்டிய ஆர்வம், கல்வி மீதான அவர்களின் எதிர்பார்ப்பை பிரதிபலித்தது என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மேலும் இத்தகைய பயிற்சிகள், எதிர்காலத்தில் சிறந்த சாதனையாளர்களை உருவாக்க உதவும் என்ற நோக்குடன் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர் மாவட்ட கல்வி நிர்வாகிகள்.இந்த பயிற்சிகள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பது பின்தங்கிய மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போட்டி மிகுந்த இன்றைய உலகில், கல்வியோடு தற்காப்புக் கலை பயிற்சிகளும் அவசியமாகி விட்டதாக கூறுகின்றனர் கல்வியாளர்கள். மேலும் இதன் மூலம் கல்வி மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையுடன் அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வழி ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி