அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2013

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.

சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேலு பேசுகையில்,""அரசு ஆரம்பப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால், பல பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை, தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரனும், இந்த கருத்தை தெரிவித்தார். இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் அளித்த பதில்: அரசு ஆரம்பப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறையவில்லை. ஆரம்பப் பள்ளிகளில், 14 லட்சத்து, 63 ஆயிரத்து 767 மாணவர்களும்; நடுநிலைப் பள்ளிகளில், 13 லட்சத்து, 83 ஆயிரத்து, 756 மாணவர்களும் படிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில், 7 லட்சத்து, 20 ஆயிரத்து, 381 மாணவர்களும்; மேல்நிலைப் பள்ளிகளில், 22 லட்சத்து, 84 ஆயிரத்து, 992 பேரும் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளை விட, 20 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில், கூடுதலாக படிக்கின்றனர்.விஜயதாரணி - காங்கிரஸ்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 22 அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில், ஆங்கில வழிகல்வி திட்டம் இருப்பதும், இது, அரசுப் பள்ளிகளில் இல்லாததும் தான் காரணமா என,தெரியவில்லை. அரசுப் பள்ளிகளில், படிப்படியாக, ஆங்கில வழி கல்வி அமல்படுத்தப்படும் என, அரசே தெரிவித்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், அரசு கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி