தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் -நாளிதழ் செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் -நாளிதழ் செய்தி.

தேர்வுத் துறையின் குளறுபடியான உத்தரவால், தேர்வுப் பணிகளுக்குச் செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல், முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வுகள், 27ம் தேதி வரை நடக்கின்றன. மறுநாளில் இருந்து, விடைத்தாள் திருத்துவது என, முதலில், தேர்வுத்துறை முடிவு செய்திருந்தது. திடீரென, இரு நாட்கள் முன்னதாக, 25ம் தேதியில் இருந்தே, விடைத்தாள் திருத்தும் பணியை துவங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள், முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.தேர்வுப் பணிகளில், துறை அலுவலர்களாக, மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்; விடைத்தாள் திருத்தும்மையங்களுக்குச் செல்லும் போது, விடைத்தாள் திருத்தும் பணியின் தலைமை அலுவலர்களாக, பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இவர்களுக்கு கீழ், ஜூனியர் முதுகலை ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.இந்நிலையில், மூத்த முதுகலை ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணிகளின், தலைமை அலுவலர்களாக பணி நியமனம் செய்து, தேர்வுத்துறை உத்தரவு அனுப்பி உள்ளது.தேர்வுப் பணிகள், இன்னும் இரு நாட்கள் இருக்கும் போது, தேர்வுப் பணிகளுக்குச் செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல், மூத்த முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:இரண்டு நாளில், ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. தேர்வு முடிந்த மறு நாளில் இருந்து, விடைத்தாள் திருத்தும் பணிகளை துவங்கலாம். ஏற்கனவே, இப்படித் தான் கூறியிருந்தனர். இப்போது, 25ம் தேதியில் இருந்தே, பணிகளை துவக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு, தேர்வு முடிந்த பின் தான், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி