மே 9ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

மே 9ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதியை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மே 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிபதற்கு கடைசி நாள் மே 20ம்தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தயார் நிலையில் 40,000 விண்ணப்பங்கள்:இதற்காக 40,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 22,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 2011ம் ஆண்டு 25,000 விண்ணப்பங்களும், 2012ம் ஆண்டு 27,877 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்:கலந்தாய்வுக்கான தேதிபிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதியன்று மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டதால் கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது. அதனால் இந்த முறை பிளஸ் 2 முடிவுகள் வந்த பிறகே கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கக வட்டாரம் தெரிவித்துள்ளது.மருத்துவ இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு?!கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கும் ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை இடம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி