அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

ஊதிய முரண்பாடு பிரச்னையில் குழுவின் அறிக்கையை வெளியிடும் முன்பு கருத்து கேட்கக் கோரி அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான குழுவின் அறிக்கையைவெளியிடும் முன் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்.வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பணியாளர்கள் மாவட்ட தலைநகர்களில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வீ.குணசேகரன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் மூ.ராசாமணி வரவேற்றார். அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.மாநிலத் துணைப் பொதுச்செயலர் பெ.நல்லதம்பி, பொருளர் சி.பரமசிவம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஜெயச்சந்திரராஜா, சரவணன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வங்கி ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ரமணி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி