"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீடு,"சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE)ஆக மீண்டும் இன்று விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீடு,"சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE)ஆக மீண்டும் இன்று விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்.

இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்காலதடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை  படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் நேற்று (29.04.2013) விசாரணைக்கு வந்தது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இடைக்காலதடை  உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு ஏற்க மறுத்துவிட்டனர்.இதையடுத்து இம்மனு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று விசாரிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி