10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29-ல் இடமாறுதல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2013

10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29-ல் இடமாறுதல் கலந்தாய்வு.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்தக் கலந்தாய்வு வெள்ளி (மே 24), சனிக்கிழமைகளில் (மே 25) நடைபெறுவதாக இருந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து இந்தக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, மே 28-ஆம் தேதி மாவட்டத்திற்குள் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும், மே 29-ஆம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும் கலந்தாய்வு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழகத்தில் அதிகப் பணியிடங்கள் காலியில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி