ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2013

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, சென்னை, பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடியில், பேருந்து மீது லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இச்சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை,சென்னை ஐகோர்ட், தானாக முன் வந்து, வழக்காக எடுத்து விசாரித்தது. அப்போது, "பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால், அவர்களது பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரி விக்க வேண்டும். தொடர்ந்து, படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்&' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, போக்குவரத்து துறையினரும், போக்குவரத்து போலீசாரும்களத்தில் இறங்கினர். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை, போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பும் வேலையை தொடர்ந்தனர்.மேலும், படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் விவரங்களை, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பினர்.அதன் அடிப்படையில், படிக்கட்டு பயணத்தை தவிர்க்குமாறு, மாணவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இருப்பினும், கடும் நடவடிக்கை இல்லாததால், படிக்கட்டு பயணத்தை தொடரவே செய்தனர்.தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில், மாணவர்கள் கமிட்டியை அமைக்கும் திட்டத்தை, போக்குவரத்து துறையினர் கொண்டு வந்தனர்.முதல் கட்டமாக, கே.கே., நகர், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், இதை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.இதற்காக, பள்ளிகள் தோறும், நான்கு முதல், ஐந்து பேர் கொண்ட மாணவர்கள் குழு அமைக்கப்பட்டது. படிக்கட்டு பயணம் குறித்த விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதும், ஆபத்தான பயணத்தை தொடரும் மாணவர்கள் குறித்து, கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிப்பதும், அக்குழுவின் பணி.மாநகர் முழுவதும், இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அப்போது இரண்டு பள்ளிகளில் மட்டுமே இந்த மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.இதனால், தேர்வுகள் முடியும் வரை, ஆபத்தான நிலையில், படிக்கட்டு பயணத்தை மாண வர்கள் தொடரவே செய்தனர்.கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் மீண்டும் படிக்கட்டு பயணத்தை தொடர வாய்ப்புள்ளது.இதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த, போக்குவரத்து துறையினரும், போக்குவரத்து போலீசாரும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.இதுகுறித்து,போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"மாணவர்கள் மத்தியில் கமிட்டி அமைக்கும் பணியை முழுமையாக செயல்படுத்துவதற்குள், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி