ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2013

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்.

"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமேகொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத் தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால்,அதிகாரம் இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தொடர்பாக, கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவில், "இந்த அமைப்பு, ஆலோசனை வழங்கும் அமைப்பு தான். எந்தப் பாடப் பிரிவை துவக்க வேண்டும் என முடிவு செய்யும் அமைப்போ அல்லது, தன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளின் செயல்பாட்டை தடை செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்போ அல்ல" என உத்தரவிட்டது.மேலும், "எம்.சி.ஏ., என்பது, தொழில்நுட்ப பாடம், எம்.பி.ஏ., பாடம், தொழில்நுட்ப பாடமல்ல. எனவே, எம்.பி.ஏ., பாடப் பிரிவுக்கு அனுமதி அளிப்பதை, ஏ.ஐ.சி.டி.இ.,யால் நிர்ணயிக்க முடியாது" எனவும் உத்தரவிட்டது. இதனால், நாட்டின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும்,ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பின் அதிகாரம் குறித்து கேள்வி எழுந்தது.இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தலைமையில், அத்துறை அதிகாரிகள் நேற்று கூடி, அவசரசட்டம் பிறப்பிப்பது என முடிவு செய்தனர். அது குறித்த தங்களின் பரிந்துரையை, சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்குப் பிறகு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். விரைவில் பிறப்பிக்கப்படும், அந்த அவசர சட்டத்தில், எந்தெந்த தொழில்நுட்ப கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற வேண்டும், எந்தெந்த படிப்புகள், ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில் வரும் என்பன போன்ற அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும் என, மத்திய மனித வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி