அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28ல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2013

அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28ல் கலந்தாய்வு.

அண்ணாமலைப் பல்கலையில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, வரும் 28ம் தேதி கலந்தாய்வு துவங்குகிறது. இன்ஜினியரிங் படிப்புக்கு, ஜூலை 3ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரையிலும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை படிப்புக்கு, ஜூலை 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.இதுகுறித்து நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், இன்ஜினியரிங் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், 22ம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 28ம் தேதி மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுப் பிரிவினருக்கும், 29ம் தேதி பிற வகுப்பினர் (ஓ.சி.,) தவிர, மற்ற அனைத்து வகுப்பினருக்கும், 30ம் தேதி எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது.இன்ஜினியரிங் மற்றும் வேளாண்மை படிப்பு கலந்தாய்வில், முதல் நாள் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து மற்ற அனைத்து வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடத்தபடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி