ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2013

ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!

''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். பல நாடுகளை சேர்ந்தபல ஆசிரியர்களை நான் பார்த்துவிட்டேன். பலர் ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக, வேலையாக தான் பார்க்கிறார்கள். சம்பளத்திற்கான‌பணி அது, அவ்வளவே. ஒரு மருத்துவரை போல, வழக்கறிஞரை போல, நான் ஒரு ஆசிரியர் என்றே வாழ்கிறார்கள்.எவ்வளவு பெரிய தவறான கண்ணோட்டம் அது. நாளைய சமுதாயத்தையே அன்பும் அறிவும் கலந்து கட்டும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதை உணராமலேயே பலர் இயங்குகிறார்கள். பல நாடுகளில் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர கொடுக்கப் படுவதில்லை. ஆசிரியர்கள் பலர் வறுமையில் வாடுகிறார்கள்.குழந்தைகளின் வாழ்க்கைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆசிரியரும் முக்கியம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஆசியர்கள் இல்லை. 114 நாடுகளில் இந்த கவலைஅதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் 1,815 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தான் இருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 21% ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள்''-பான் கி மூன் (ஐ.நா பொது செயலாளர்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி